சனி, 13 அக்டோபர், 2012

மனம் மருந்து மனிதநேயம்

படித்ததில் பிடித்தது !

மனம் மருந்து மனிதநேயம்


அறிவு அது பட்டறிவாக இருக்கலாம். அல்லது படிப்பறிவாக இருக்கலாம். எந்த அறிவாக இருந்தாலும் அதற்கு ஒரு எல்லை உண்டு. ஆனால் எல்லை இல்லாத்து நம் சிந்தனைதான். படித்தவர்களெல்லாம் அறிவாளியாக ஆவதில்லை. தலைவர்களாக உருவாவதில்லை. அது அவரவர்களின் செயல்மட்டும் சிந்தனை உரத்தை பொறுத்தது.


வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நின்றவர் யார்?
என்ற பழைய சினிமா பாடல் இங்கு நினைவுக்கு வருகிறது. நாம் எந்தத் துறையைச் சார்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
உதாரணமாக: நீங்களும் மருத்துவரக, தொழிலதிபராக, வழக்கறிஞராக, பொறியாளராக, கல்வி போதிக்கும் பேராசிரியராக, பொழுது போக்கு அளிக்கும் நடிகராக இருக்கலாம். அவர் எந்த்துறையைச் சார்ந்தவராக இருந்தாலும் மனித நேயம் கொண்டவராக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர் செய்யும் தொழிலில் சிறந்தும், உயர்ந்தும் இருக்க முடியும். இல்லாவிட்டால் அவருக்கு சமூகத்தில் முகவரி என்பது கிடைப்பது அரிதாகும்.
மனம் மருந்தைவிட சக்தி வாய்ந்தது. அதனால்தான் நம்பிக்கை இல்லாத மருத்துவம் முற்றிலும் பயனளிக்காது.

ஒரு நர்சு நோயாளியிடம் சொல்கிறார் பெரிய டாக்டர் வெளியே சென்றிருக்கிறார் வர நேரமாகும். சின்ன டாக்டர் இருக்கிறார் அவரிடம் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அதற்கு நோயாளி சொல்கிறார், பரவாயில்லை எவ்வளவு நேரமானாலும் பெரிய டாக்டரிமே பரிசோதனை செய்து கொள்கிறேன். அவர் வரும் வரை நான் காத்திருக்கிறேன். இந்த உரையாடல் என்ன சொல்கிறது. நம்பிக்கை தான் காக்க வைக்கிறது. நம்பிக்கை தான் மருந்தாகிறது. நம்பிக்கை தான் குணமளிக்கிறது. அந்த நம்பிக்கையை ஏற்படுத்துவது தான் மருத்துவர்களின் தலையாய கடமையாக இருக்க வேண்டும்.
ஆடையைக் கிழித்துக் கொண்டு சாலையில் திரிபவர் மட்டும் மன நோயாளி அல்ல. கோபத்தின் உச்சியில் சென்று கடைசியில் கொலை செய்யும் அளவிற்கு செல்பவரும், தேர்வில் தோல்வி என தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களும், காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்ளும் இளைஞர்களும், கணவன் – மனைவி உறவுகளில் சந்தேகமும், புகுந்த வீடா, பொறந்தவீடா என்று போட்டியில் விவாகரத்து வரை செல்லும் பெண்களும், பணிபுரியும் இடங்களில் ஆடவரின் பாலியல் தொந்தரவால் மன உளைச்சலுக்கு ஆளாகும் இளம் பெண்களும், தற்போது மென்பொருள் கணினி துறையில் தன்னைவிட
 அதிகம் சம்பாதிக்கும் இளைஞர்களைப் பார்த்து தாழ்வு மனப்பான்மை கொள்ளும் பெற்றோர்களுக்கும், பெரியோர்களுக்கும் ஏற்படும் மன அழுத்தம், விரக்தி, இவைகளெல்லாம் ஒரு விதமான மனநோய்தான் என்பதை மனநோய் வல்லுநர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
தற்போது வெளிநாடுகளில் காலச்சார சீரழிவு காரணமாக சர்வ சாதாரணமாக இளைஞர்கள் மனவெறி பிடித்து துப்பாக்கி எடுத்துக் கொண்டு அங்காடி மையங்களிலும், பொது இடங்களிலும், ஏன் பள்ளிகளிலும் தன்னுடன் படிக்கும் மாணவ மாணவிகளையும், ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும் காக்கை குருவி போல் சுட்டுத் தள்ளுகிறார்கள். இந்த செய்திகள் தினம் தினம் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு காரணமென்ன?
மன அழுத்தம் (Mental stress), மனநிலையில் தடுமாற்றம், இயலாமை, விரக்தி, இவையெல்லாம் எல்லை தாண்டி போகும்போது மனிதன் மிருகமாகிறான். இவையே மனதிலிருந்து உடல் நோயாக மாறுகிறது. உதாரணமாக இரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், ஒற்றைத் தலைவலி, மாத விடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி, தூக்கமின்மை, தீராத சளித்தொல்லை & தும்மல் (Sinusitis), குடல் புண் (Ulcer) போன்றவை.
இதற்கெல்லாம் தீர்வுதான் என்ன?
அவசர உலகம் – அதிசய உலகம்
யார் இதை கட்டிக் காப்பது?
அந்தக் காலத்தில் திருவள்ளுவர், திருமூலர், 18 சித்தர்கள் இருந்தார்கள். அதன் பிறகு கௌதம புத்தர், இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், முகம்மது நபிகள், வள்ளலார், வேதாத்திரி மகரிஷி என மகான்கள் நமக்கு ஞானத்தைக் கொடுக்க, அறிவைக் கொடுக்க, ஆற்றலைக் கொடுக்க, ஆரோக்கியத்தைக் கொடுக்க, ஆனந்தத்தைக் கொடுக்க அவ்வப்போது தோன்றிக் கொண்டேயும் இருக்கிறார்கள். அதைப்பற்றி கவலைப்படாமல், சிந்திக்காமல் இருந்துவிட்டோம். தற்போது சூழ்நிலை அந்த ஞானக் கருத்துகளை பின்பற்றியே ஆகவேண்டும் என்ற சூழ்நிலை வந்து கொண்டிருக்கிறது. தற்போது மனிதநேயம் பற்றி சிந்திப்பதும் இல்லை. அன்பு என்ற வார்த்தையே யாருக்கும் தெரிவதில்லை. மனித வளம் சீர்கெட்டு வருகிறது. அதற்கு மனிதவள மேம்பாட்டுக் குழுக்கள் அதிகம் தேவைப்படுகிறது. மருந்துக்கு முன்பாக மனநல ஆலோசனை தேவைப்படுகிறது. மருந்துக்கு முன்பாக மனநல ஆலோசனை தேவைப்படுகிறது.
தாமரைச்செல்வன் ஆ
Author: 

2 கருத்துகள்: