திங்கள், 4 ஜூன், 2012

மௌன வலி

 எல்லோருக்கும் வலி இருக்கும் எனக்கு கொஞ்சம் அதிகமாவே இருக்கு. டீ கடை ல டீ சாப்பிடும் போது நாலு பேரு நம்மள பாத்து கை காட்டி குசுகுசுனு பேசுவானுங்க அப்போ வலிக்க ஆரம்பிக்கும் தோற்றவனின் வலி. முயற்சி செய்யும் போது உதவாதவங்க தோற்றவனுக்கு அறிவுரை சொல்வானுங்க. நண்பர்கள் தோள்கொடுப்பார்கள் சொந்தகாரங்க தான் கேவலமா பாப்பானுங்க. கவர்மென்ட் வேலை மட்டும்தான் வேலையா ? நாமதான் யோசிக்கணும் சொல்றவங்க சொல்லத்தான் செய்வாங்க. அப்புறம் பணம் கொடுத்து வேலை வாங்கிட்டா வயிறு எரிய பாப்பானுங்க அதேசமயம் ஏமாந்தா அந்தவலி போக ரெம்ப நாள் ஆகும். எப்பவுமே உள்ளதை தேன் போல் நக்கு இதை உங்களுக்கு நான் சொல்ல எனக்கு தகுதி இருக்கு   ---- நானும் ஏமாந்தவன் தான் ரெம்ப வலிக்குதுப்பா.....