வெள்ளி, 28 செப்டம்பர், 2012

தாண்டவம் - திரை விமர்சனம்

தாண்டவம் - திரை விமர்சனம்

கஜினி படத்த பார்த்த மாதிரியே இருக்கு , அதே பலிக்கு பலி கதைதான் ஆனா நல்ல முயற்சி பார்க்கலாம் 

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

நாசமாய் போக ஒரு நல்ல வழி WALLMART


நாசமாய் போக ஒரு நல்ல வழி 
மெரிக்கா இந்த வழியில் சென்றது....பிரான்ஸ் அதை பின்பற்றியது... கொஞ்ச கொஞ்சமாய் சிறு வணிகர்கள் கடைசாத்தி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இப்போது இவர்களின் அடுத்த குறி... இந்தியா...இந்தியாவின் சிறு வணிகர்கள் சிறுக சிறுக சேர்க்கும்500 பில்லியன்...

 


இன்றைய தலைப்பு செய்தி... இந்தியா அயல் நாட்டினருக்கு சிறு வணிகத்துறையினை திறந்து விட்டுள்ளது...

தாராளமயமாக்கலின் உச்சமிது.இது அமெரிக்க சிறு வணிகர்களின் சாபமாயிருந்து வருகிறது... கடந்த 20 வருடங்களாய். இந்த புற்று நோய் இந்தியாவுக்கும்.. இப்பொழுது...


ன்ன ஆகும் இன்னும் 10 வருடங்களில்... 20 வருடங்களாய் நாம் போய்க்கொண் டிருக்கும் ஒவ்வொரு  சிறு வணிகர் கடைகளும் ஒவ்வொன்றாய்  காணாமல் போகும்...அது நம் தெருக்கடைசி கடைகளையும் சேர்த்து தான்...நீங்களே அந்த சிறு வணிகர்களில் ஒருவரெனில் உங்கள் கடையினை மூடிவிட்டு கூலிக்கு வேலை செய்யும் நிலையில் கூடிய விரைவில்...


தன் இரண்டாவது குறி... ஏற்கனவே நடுதரகர்களால் ரத்தம் உறியப்படும் ஏழை விவசாயிகள்... அவர்களின் நெல்  விலையும் அயல் நாடுகளே தீர்மானிக்கும்... அவர்கள் என்ன விதைக்கப் போகிறார்கள் என்பதையும் சேர்த்து தான்..


ற்கனவே NIKE சட்டையும் ADIDAS காலணிகளும் போட்டு அமெரிக்கா கொன்ற ஆங்கிலத்தை தன் பங்குக்கு கொல்லும் இந்திய நடுத்தர வர்க்கம் இதன்  மூன்றாவது  குறி...            நாம் என்ன சாப்பிடுவோம்...  என்ன உடுத்துவோம் ...  என்ன செய்வோம் என்பதையெல்லாம் ஒரு சில நிறுவனங்களே நிர்ணயிக்கும்...


ற்கனவே மு க குடும்பம் நாம் பண்ணும் நிறைய செயல்களை   நிர்ணயிப்பதால் சொரணை கெட்ட நம் தமிழ் சமூகம்...தன் வயிறு நிறைந்தால் சரி...  தன் டிவி யில் கூடுதல்   100 தொடர்கள் வந்தால் போதும் என்று வழக்கம் போல் கட்சிக் கொடி தூக்கியும்...   கோலிவூட் கோமாளிகளுக்கு கட் அவுட் வைத்தும்... மெகா சீரியல் பார்த்தும் பொழுது போக்கும்.

த்தனை ஆண்டுகள் எதிர்த்து கோசமிட்ட உழைப்பாளர்கள் கட்சிகள் இன்னும் ஏன் இந்த விசயத்தில் மௌனம்....


ந்த மௌனம் சிறுவணிகர்களை கொஞ்ச கொஞ்சமாய் கொல்லத்தொடங்கும்.கண் மூடி முழிக்கு முன்   திரும்ப வரமுடியாத  தூரம் போயிருக்கும்..இந்த புற்றின் வேர்கள்...



ஏகப்பட்ட கவலைகளுடன்...

இனி தமிழ் மெல்ல வாழும்  கட்டுரைக்கு  நன்றி 


வியாழன், 6 செப்டம்பர், 2012

முகமூடி சிறு குறிப்பு

 உண்மையான முகமூடி இவர்தான்                                                         


இவரு போலி 

  மிஸ்கின் தனக்கு கெடைச்ச வாய்ப்பை வீணக்கிட்டார் . முகமூடி வீரர் மாயாவி யோட ராணி காமிக்ஸ் கதைகள் எவ்வளவோ இருக்க இந்த மாதிரி கன்றாவி யா படம் எடுப்பருன்னு நினைக்கவே இல்லை. அந்த மலை முகடு, எழும்பு கூடு முத்திரை, குரானா கதா பாத்திரம், அருவி குகை, குள்ள மனிதர்கள் , விச அம்பு , ஒற்றர்கள் அடடா எவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கு, ஏமாத்திட்டார் மிஸ்கின் . BETTER LUCK NEXT TIME