ஞாயிறு, 14 அக்டோபர், 2012

கருப்பு தங்கம் யா நாங்க

WOW

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவரைப் பிடிக்கும். சிலருக்கு கலராக இருப்பவர்களைப் பிடிக்கும், சிலருக்கு மாநிறமாக அதாவது சற்றே கருப்பு நிறமாக இருப்பவர்களை ரொம்பப் பிடிக்கும். ஆனால் இப்படி கருப்பு நிறத்தை விரும்புவோர் கிட்டத்தட்ட மைனாரிட்டிதான். பெரும்பாலானவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் போல சுண்டினால் ரத்தம் வரும் கலரில் உள்ளவர்களைத்தான் பிடிக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், கருப்பு நிறத்திற்கு என்ன குறைச்சல் என்று சேலையை வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பியுள்ளது சென்னையைச் சேர்ந்த வாவ் என்ற வுமன் ஆப் ஒர்த் அமைப்பு.

கருப்பு நிறமே சிறப்பு, கருப்புக்கு நிகராக எதுவும் இல்லை, கருப்புதான் எங்களுக்குப் பிடிச்ச கலரு என்று கோஷம் போடாத குறையாக இந்த அமைப்பு கலக்கலாக கிளம்பியுள்ளது. இந்த அமைப்பின் இயக்குநராக இருப்பவர் கவிதா இம்மானுவேல். சமீபத்தில் இந்த அமைப்பு சென்னையில் ஒரு பேரணியை நடத்தியது. அதில் ஏகப்பட்ட பேர்கலந்து கொண்டு கருப்பு நிறத்திற்கு ஜே போட்டனர்.
வாவ் என்பது வுமன் ஆப் ஒர்த் என்பதின் சுருக்கமாம். இது ஆணாதிக்க சமுதாயம். பெண்கள் அழகாக இருந்தால்தான் மதிக்கிறார்கள், பெருமையாக பார்க்கிறார்கள். ஆனால் இது தவறு என்பதை நிரூபிக்கவே இந்த அமைப்பை தொடங்கினோம். கருப்பு நிறப் பெண்களும் திறமையானவர்கள், அழகானவர்கள், உயர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கவே இந்த அமைப்பு பாடுபடுகிறது.

குழந்தை பிறந்தது முதலே பவுடர் போடுவது, கிரீம் தடவுவது என்று கெடுத்து விடுகிறது இந்த சமுதாயம். பெண்கள் வளரவளர அவர்களுக்கு மேக்கப் அது இதென்று, கருப்பு நிறம் என்றால் அலர்ஜியாக்கி விடுகிறார்கள். இது மகா தவறு என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். நமது நிஜமான கலருக்கு மட்டுமே மரியாதை தர வேண்டும். செயற்கைப் பூச்சு என்றுமே நிரந்தரமல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் ஒரு நிறம் என்பது இயற்கை. அதை அப்படியே ஏற்பதுதான் நியாயம். அதை விட்டு விட்டு கருப்பு நிறமாக இருந்தால் தவறு, அசிங்கம், அவலட்சணம் என்று பேசுவது முட்டாள்தனம் என்று ஆவேசமாக பேசுகிறார் கவிதா.
கருப்பு நிறமாக இருப்பவர்களும் கூட அழகானவர்கள்தான். தங்களது முகத்திற்கேற்ற, நிறத்திற்கேற்றவாறு ஹேர் ஸ்டைல் உள்ளிட்டவற்றை மாற்றிக் கொண்டால் கருப்பு நிறத்தினரும் கூட களையாகத்தான் இருப்பார்கள் என்பது இவரது வாதம்.

நாமதான் இங்கு கருப்பு, சிவப்பு என்று பார்க்கிறோம். நமது நாட்டைச் சேர்ந்த செக்கச் செவேல் என்ற கலரில் இருப்பவர்கள் கூட அமெரிக்காவுக்கோ அல்லது லண்டனுக்கோ போனால் அவர்களை கருப்பர்கள் என்றுதான் வெள்ளைக்காரர்கள் அழைக்கிறார்கள். அப்போ்து இவர்கள் எங்கு போய் தங்களது முகத்தை வைத்துக் கொள்வார்கள் என்று இடிப்பது போல கேட்கிறார் கவிதா.
கருப்பு நிறமாக இருப்பவர்களே கவலையேபடாதீர்கள், சூப்பர்ஸ்டாரே நம்ம கலர்தான், ஜமாய்ங்க, சாதியுங்க...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக