வியாழன், 18 அக்டோபர், 2012

கந்தசாமி மாமா

கந்தசாமியும் அகத்திகீரையும் 

     
 கந்தசாமி மாமா என் வாழ்க்கைல மறக்க முடியாத நபர் . மரம் ஏறுவதை தொழிலாக கொண்டவர் . ஒருமுறை மரம் ஏறும் போது தவறி கிழே விழுந்துட்டார் . அதோட அவரோட வாழ்க்கையும் கிழே விழுந்துடுச்சு .

 அவரோட இடுப்பு உடைஞ்சுடுச்சு . அதுக்கப்புறம் கட்டில்தான் வாழ்க்கையா மாறிடுச்சு . ஒருமுறை அவரை பார்க்கும் பொது  அவர் சொன்ன வார்த்தைகள் மறக்க முடியாதது .
 நல்லா இருக்கும் பொது நம்மளை எல்லோரும் தேடுவாங்க ஆனா வாழ்க்கைல தோத்துட்டா சாவு கூட நல்லா வராது .
        
சில நாட்களுக்கு பிறகு அவரை பார்க்க போனேன் ஆனா அவர் உயிரோட இல்லை . அவர் இறக்கும் வயது இல்லை . விசாரிச்சு பார்க்கும் பொது சாராயம்  குடிச்சுட்டு அகத்தி கீரை சாப்பிட்டாராம் நடக்க முடியாதவருக்கு சாராயம் எப்படி வந்திருக்கும் அதை குடிச்சுட்டு அகத்திகீரை சாப்பிட்டால் இறந்திருவாங்கனு அவருக்கு தெரியாமலா இருக்கும் . இதை கொலைன்னு எடுத்துக்கவா இல்லை கருணை கொலைன்னு எடுத்துக்கவா . 

கந்தசாமி மாமா எனக்கு நல்லா ஒரு விஷயத்தை புரிய வைத்திட்டார்   " வாழ்க்கை ரெம்ப சின்னது "

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக