வியாழன், 11 அக்டோபர், 2012

சைபர் கிரைம்

சைபர் கிரைம்

ஆன் லைன் மூலமாக தகவல் அனுப்பி விளையாட்டு நடத்தியதில் பாவம் சொந்த நாட்டில் அகதிகள் போல ஓடி அலைந்தது வடநாட்டு மக்கள்தான். இது போன்ற அட்டாக்குகள் சைபர் யுத்தம் (Cyber War) என்று அழைக்கப் படுகிறது. இதை எப்படித் தடுப்பது என்பது பற்றி விவாதிக்கிறார் சைபர் கிரைம் சட்டவல்லுநர் வி.ராஜேந்திரன்.

"சமீபத்தில் நடந்த சைபர் வாருக்கு மத்திய அரசு பல இணைய தளங்களை முடக்கி வைத்தது. இது தீ பற்றிக் கொண்டவுடன் தீயை அணைப்பது போலத்தான். இது உடனடித் தீர்வு அவ்வளவுதான்,  ஆனால் இதற்கு நிரந்தரத் தீர்வு என்று ஒன்றை அமைக்கவேண்டும். இது போன்ற  சம்பவங்கள் இனி சமூகத்தில் நடக்காவண்ணம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தின் இப்போது நாம் இருக்கிறோம்.

மேலும் சில நாட்களுக்கு செல்போனில் இவ்வளவுதான் மெசேஜ் அனுப்பலாம் என்றும் மத்திய அரசு தடை போட்டது.  இது கல்லூரி மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தனிமனித சுதந்திரத்தில், உரிமையில் தலையிடுவது போன்ற செயல் இது என்பதையும் நாம் மறுக்க முடியாது. ஆனால், இதுவும் நிரந்தரத் தீர்வு கிடையாது என்பதால்தான்,  இப்போது மத்திய அரசே இந்த தடையை விளக்கிக் கொண்டு விட்டது.


சீனாவில் இதுபோன்ற குற்றசெயல்கள் நடக்காவண்ணம் சைபர் இராணுவம் (Cyber War) என்கிற அமைப்பே நடத்துகிறார்கள். நம் நாட்டிலும் சர்க் இந்தியா என்று ஒன்று இருக்கிறது. அவர்கள் செயல் படுகிறார்களா என்றே தெரியவில்லை.  நம்மை விட தொழில் நுட்பங்களில் அதிகம் வளர்ந்துள்ள இஸ்ரேலிடம் தொழில் நுட்பங்களைக் கற்றுக்  கூட, நம் நாட்டிலும் அதற்கான வழிமுறைகளைக் கையாளலாம்.

நம்நாடு இப்போது அந்த கட்டாயத்தில்தான் இருக்கிறது. ஒவ்வொரு நாட்டுக்கும், எல்லைகள் என்று ஒன்று இருப்பதைப் போல இந்த வலைதளங்களுக்கு எல்லைகள் என்று ஒன்று வரையறுக்கப் படவேண்டும். அப்போதுதான் இனி இதுபோல அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க முடியும்" என்று கூறுகிறார் சைபர் கிரைம் சட்ட வல்லுநர் வி. ராஜேந்திரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக