சனி, 10 நவம்பர், 2012

இதை எத்தனைபேர் படிப்பீர்கள் ?

கற்பி,ஒன்றுசேர்,கலகம் செய் ! - அம்பேத்கர் 

         "ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து பிறகு, அவன் தானாகவே கிளர்ந்து எழுவான் " என்று ஒடுக்கப்பட்ட இந்திய மக்களின் விடிவெள்ளி யாக வந்தவர் புரட்சியாளர் அம்பேத்கர் .
             1891 ஏப்ரல் 14 ம் தேதி மும்பையின் மகர் என்னும் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்தார் அம்பேத்கர் . வகுப்பறையில் தண்ணீர் குடிக்க கூட அனுமதி இல்லை அந்த அளவுக்கு சாதி வெறி . இந்த அவமானங்கள் சாதிய அமைப்புக்கு எதிராக அம்பேத்கரை கிளர்ந்து எழ செய்தது பரோடா மன்னரின் உதவியால் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்தார்.லண்டனில் சட்டம் முடித்தார் இந்திய திரும்பியவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக சட்ட ரீதியாகவும் சமூக ரீதியாகவும் போராட்டங்களை முன்னெடுத்தார் சவ்தார் ஏரியில் தலித்துகள் இறங்கியதால் மந்திரம் ஓதி தீட்டு கழித்தனர். இதை கண்டித்து ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி மனித நீதிக்கு எதிரான மனுநீதியை கொளுத்தினார் .
                இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எழுத்து வடிவம் கொடுத்த அம்பேத்கர் விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் ஆனார்
               " இந்தியாவில் ஒரு தோட்டியின் மகன் தோட்டியகதான் மாற வேண்டும் என்பது கருவிலேயே தீர்மானிக்க படுகிறது . இந்துவாக பிறந்த நான் ஒருபோதும் இந்துவாக சாக மாட்டேன் " என்ற அம்பேத்கர் லட்சகணக்கான மக்களுடன் பௌத்ததில் சேர்ந்தார் 
               அம்பேத்கர் என்ற பெயர் கொண்டதால் அவரும் தாழ்த்த பட்டவர் என ஒரு IAS அதிகாரியையே ஒதுக்கி வைத்த நாடு நம் நாடு

    தீண்டாமை, தேசத்தின் நோயாக இருக்கும் வரை அம்பேத்கரின் தேவைகளும் இருந்தே தீரும் !

1 கருத்து:

  1. "தீண்டாமை, தேசத்தின் நோயாக இருக்கும் வரை அம்பேத்கரின் தேவைகளும் இருந்தே தீரும் !"
    - நல்ல பதிவு இந்த நிலை மாற இளைய சமுதாயத்தின் கையில் தான் உள்ளது அவர்களை நல் வழி படுத்தினால் விரைவில் மறையும் இந்த தீண்டாமை

    பதிலளிநீக்கு